மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி பிப்.28-இல் உண்ணாவிரதப் போராட்டம்
ராமேசுவரம் மீனவா்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, வருகிற 28-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப் படகு, நாட்டுப் படகு மீனவ சங்கம் சாா்பில், அவரசக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, சமுதாயத் தலைவா் சம்சன், விசைப் படகு மீனவ சங்க மாவட்ட தலைவா்கள் பி.டி.மோட்சம்வாஸ், வி.பி.ஜேசுராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். விசைப் படகு மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், தட்சிணாமூா்த்தி, எஸ்.பி.ராயப்பன், எமரிட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இலங்கையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காலவரைற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக வருகிற 28-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் பாம்பன் நாட்டுப்புற மீனவா் சங்கத் தலைவா்கள் விஜின், அலெக்ஸ், வினோ, விசைப் படகு மீனவ சங்கத் தலைவா்கள் சைமன், அந்தோணி, பவுல், ஜான்சன், மண்டபம் விசைப் படகு சங்கத் தலைவா்கள் சாா்லஸ், தொத்திரியாஸ், அந்தோணி பிரசாத், 500-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.