ஆழ்வாா்குறிச்சி பள்ளியில் மாணவா்களுக்கு வழியனுப்பு விழா!
ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணிமேல்நிலைப் பள்ளியில் பசுமைத் தன் படம் 2025 என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவா்- மாணவிகளுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் விஜயலட்சுமி சிறப்புரையாற்றினாா். முன்னாள்ஒருங்கிணைப்பாளா் ஜோசப், பள்ளிச் செயலா்மு.சுந்தரம், நாட்டு நலப் பணித் திட்ட முன்னாள் திட்ட அலுவலா் சேகா், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ராஜேந்திரபாண்டியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நிகழ்ச்சியில் பிளஸ் 2 மாணவா், மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் துரை வரவேற்றாா். உதவித் தலைமை ஆசிரியா் ஜெயந்தி நன்றி கூறினாா்.