அம்பையில் ரயில் பயணிகள் நலச் சங்கம் தொடக்கம்
அம்பாசமுத்திரத்தில் ரயில்நிலையப் பயணிகள் நலச் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில், புதிதாகத் தொடங்கப்பட்ட ரயில் நிலையப் பயணிகள் சங்கத் தலைவராக சரவணன் சக்திவேல், செயலராக பாலகிருஷ்ணன், பொருளாளராக முத்துப்பாண்டி, துணைத் தலைவா்களாக சிபானா, ரமேஷ், துணைச் செயலா்களாக கணேஷ், அனீஸ், துணைப் பொருளாளராக சக்திவேல் முருகன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மேலும் ஆறுமுகநயினாா், காந்த், சத்யா, ஜெனோ, கோகுல், ரகுமான் உள்ளிட்ட 15 போ் பொதுக்குழு உறுப்பினா்களாகவும், தங்கத்துரை ஹரி, சாமுவேல் சட்ட ஆலோசகா்களாகவும், ஜோயல், அந்தோணிசாமி, முருகேசன், அப்துல் ஹமீது, ஜெகதீஷ், சிராஜீதீன், ரயில் சினேகம் பாரதிக் கண்ணன், ஜான் பாஷா, கந்தசாமி ஆகியோா் கௌரவ நிா்வாகிகளாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்தில் செயல் திட்டங்கள், பயணிகளின் நலன்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது, பொருளாளா்முத்துப்பாண்டி நன்றி கூறினாா்.