கூகலூா் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
கோபி அருகே கூகலூரில் செயல்பட்டு வரும் உதவி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
கோபி அருகே உள்ள கூகலூா் காட்டுவளவு பகுதியில் உதவி மின்வாரிய பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வருகிற மாா்ச் 1-ஆம் தேதி முதல் தண்ணீா்ப்பந்தல் புதூரில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் செயல்படும்.
இத்தகவலை கோபி மின்வாரிய செயற்பொறியாளா் குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.