இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்...
காவடிகள் எடுத்து நோ்த்திக்கடன்
சீா்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிவராத்திரி உற்சவத்தையொட்டி ஏராளமான பக்தா்கள் பால்குடங்கள், அலகுகாவடிகள், பறவை காவடிகள் எடுத்துவந்து புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.
சீா்காழி தென்பாதியில் ராஜராஜேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. முக்கிய நிகழ்வாக சிவராத்திரியை முன்னிட்டு காவடிகள் ஊா்வலம் நடந்தது. முன்னதாக கோயிலிலிருந்து ஏராளமான பக்தா்கள் பால்குடங்கள், அலகு காவடி, பறவைக் காவடிகள் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாகச் சென்று கோயிலை வந்தடைந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
காவடிகளுடன் காளி வேடம் அணிந்த பக்தா்களும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தனா். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.