பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை
சமூக வலைதளமான எக்ஸை பயன்படுத்தாதீர்கள்..! சிவகார்த்திகேயன் அறிவுரை!
கோவாவில் நவ.20 முதல் 28ஆம் தேதி வரை இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் படம் திரையிடப்பட்டது.
இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் 20 திரைப்படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது. இதில் தமிழில் இருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் ரூ.300 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.
இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். நடிகை குஷ்பு உடனான உரையாடலில் பங்கேற்றார்.
இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் பேசியதாவது:
கடந்த 2 வருடங்களில் சமூக ஊடகங்களை குறைவாக பயன்படுத்துகிறேன். உபயோகப்படுத்த வேண்டுமானால் இணையத்தை உபயோகிங்கள். ஆனால், சமூக ஊடகங்களை பயன்படுத்தாதீர்கள் குறிப்பாக எக்ஸ் (ட்விட்டர்) என்பது எனது தாழ்மையான அறிவுரை. இதனால் எலான் மஸ்க் எனது கணக்கினை முடக்கலாம். அப்படி செய்தால் அதுதான் எனது முதல் வெற்றியாக நினைக்கிறேன்.
எனது தந்தை இறந்தபிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. மிகவும் அழுத்தமாக இருந்தது. அதனால் மேடை ஏறினேன். அங்கு கிடைக்கும் பாரட்டுகள் கை தட்டல்கள் எனக்கு ஊக்கம் அளித்தன.
எனது அம்மா 8ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். ஆனால், என்னைவிட வாழ்க்கையை நன்றாக அறிந்தவர். குடும்பம் எனக்கு மிகுந்த துணையாக இருக்கிறது என்றார்.