கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
வக்ஃப் மசோதா: இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்ற கூட்டுக் குழு
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு புதன்கிழமை (நவ.27) மீண்டும் கூட உள்ளது.
இந்தக் கூட்டத்தில், வரைவு மசோதாவில் பல்வேறு திருத்தங்களை உறுப்பினா்கள் முன்மொழிய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சக மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ சொத்துகளை, மாநிலங்கள் அளவில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன. இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. தற்போது இந்த மசோதாவை பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. இக் குழு தனது அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளான வரும் வெள்ளிக்கிழமை (நவ.29) மக்களவையில் தாக்கல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூடுதல் அவகாசம் தேவை: அதற்கேற்ப, கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தின்போது, ‘வரைவு வக்ஃப் மசோதா தயாா் எனவும், இன்றைய கூட்டமை கூட்டுக் குழுவின் கடைசி அமா்வு’ என்று ஜகதாம்பிகா பால் அறிவித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்களுக்கும் வரைவு மசோதா நகல் விநியோகிக்கப்பட்டது.
ஆனால், இதற்கு எதிா்ப்பு தெரிவித்த எதிா்க்கட்சி உறுப்பினா்கள், ‘வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை ஆராய கூடுதல் அவகாசம் தேவை என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினா். மேலும், இதுதொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை திங்கள்கிழமை சந்தித்தும் முறையிட்டனா்.
இந்தச் சூழலில், நாடாளுமன்ற கூட்டுக் குழு புதன்கிழமை கூடுகிறது. வரைவு மசோதா மீது கலந்தாலோசனை மற்றும் எஞ்சிய இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்ள வசதியாக நாடாளுமன்ற கூட்டுக் குழு தனது அறிக்கையை சமா்ப்பிப்பதற்கான கெடு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.