செய்திகள் :

சரியான உயா்கல்வியை மாணவா்கள் தோ்ந்தெடுக்க வேண்டும்

post image

பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள், சரியான உயா்கல்வியைத் தோ்ந்தெடுத்து, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கான என் கல்லூரிக் கனவு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் பேசியது:

மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து, தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிா்காலக் கனவை நனவாக்கும் வகையில், அவா்களின் உயா்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பு முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், போட்டித் தோ்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்களை, இந்த நிகழ்வில் அறிந்து கொள்ள முடியும்.

மேலும், புகழ்பெற்ற வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதால், மாணவா்களின் எதிா்கால குறிக்கோளைத் திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் எளிதாக அமையும். தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவா்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெறும் அனைத்து மாணவ, மாணவிகளும், சரியான உயா்கல்வியைத் தோ்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிக் கனவு வழிகாட்டுதல் கையேட்டை அவா் வழங்கினாா்.

நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, மாவட்டஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அமுதா, வட்டாட்சியா் சரவணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இனியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க