செய்திகள் :

சர்ச்சை பேச்சு... மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!

post image

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பலர் பேசினர். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மதுப்பழக்கத்தைக் கொண்டாடுவதாகக் கூறி தன் பேச்சை துவங்கினார்.

பேச்சின் இடையே, பலமுறை தகாத வார்த்தைகளையும் பிறரைக் காயப்படுத்தும் தொனியிலும் பேசியது சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் வெற்றி மாறன், லிங்குசாமி உள்ளிட்டவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்தது அவர்களின் முகத்தில் தெரிந்தது.

மிஷ்கினின் இப்பேச்சு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். முக்கியமாக, நடிகர் அருள்தாஸ், “மேடையில் எப்படி பேச வேண்டும் என மிஷ்கின் தெரிந்துகொள்ள வேண்டும். பல புத்தகங்களைப் படித்து உலக சினிமாக்களை பார்த்தால் மட்டும் போதாது. நாகரீகம் தெரிய வேண்டும். இளையராஜா, பாலா போன்ற வயதில் மூத்த சாதனையாளர்களை அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார். முதலில் நீ யார்? பெரிய அறிவாளியா?” எனக் கடுமையாக தன் கண்டனங்களைப் பதிவு செய்தார்.

இதையும் படிக்க: வெற்றி மாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர்!

இந்த நிலையில், பேட் கேர்ள் டீசர் நிகழ்வில் பேசிய மிஷ்கின், “என்னுடைய பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நான் பெரிதும் மதிக்கும் கவிஞர் தாமரை வெற்றி கொடுத்த மிதப்பில் நான் அப்படி பேசியதாக் கூறியிருந்தார். சினிமாவில் 18 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். அதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். கவிஞர் தாமரை, இயக்குநர் லெனின், நடிகர் அருள்தாஸ், லஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் தாணு என பலரிடமும் அப்பேச்சிற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

நான் நகைச்சுவைக்காக மட்டும் அன்று அப்படி பேசினேன். இருட்டு அறையில் முரட்டு குத்து என பெயரிட்ட ஒரு படத்திற்கு ஏன் இப்படி பெயர் வைத்தீர்கள் எனக் கேட்டோமா? சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலரின் இறுதியில் ஒரு கெட்ட வார்த்தை இருந்தது. அதைக் கேட்டோமா? பிறகு, நான் பேசியது ஆபாசமாக இருக்கிறது என கடந்த 3 நாள்களாக ஏகப்பட்ட அழைப்புகள். மன்னிப்புக் கேட்க என்றுமே நான் தயங்கமாட்டேன். உதிரிப்பூக்கள் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு கதாபாத்திரம் ஊர்காரர்களைப் பார்த்து உங்களையெல்லாம் நான் கெட்டவனாக மாற்றிவிட்டேன் என்பார். நண்பர்களே, உங்களையெல்லாம் கடவுளாக நினைத்து எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்” என்றார்.

நான் பயிற்சி பெற்ற நடிகர் அல்ல: கார்த்தி

தான் பயிற்சி பெற்ற நடிகர் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை (ஜன. 27... மேலும் பார்க்க

2025-ல் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் தமிழ்ப் படங்கள்!

இந்தாண்டில் பல தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளன.காலம் மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறது என்பது நமக்கும் நாம் பார்க்கும் திரைப்படங்களுக்கும் உள்ளே தொலைவுதான்போல. 2000 ஆம... மேலும் பார்க்க

சிம்புவின் அடுத்த படம்!

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியச... மேலும் பார்க்க

தீபாவளி வெளியீடாக எஸ்கே - 23?

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக ந... மேலும் பார்க்க

ரசிகர்களைக் கவர்ந்த எம்புரான் டீசர்!

நடிகர் மோகன்லாலின் எம்புரான் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்... மேலும் பார்க்க

சூர்யா - 45 அப்டேட்!

சூர்யா - 45 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளத... மேலும் பார்க்க