செய்திகள் :

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒரு சலூன் கடையில் சவரம் செய்யும்போது கடைக்காரரான அஜித்துடன் உரையாடல் குறித்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விடியோவில் ``நாள் முழுவதும் உழைத்தாலும், நாளின் இறுதியில் சேமிக்கக்கூடிய வகையில் எதுவும் மிஞ்சவில்லை’’ என்று ராகுலிடம் அஜித் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ராகுல் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ``அஜித் கூறிய `எதுவும் மிச்சமில்லை’ என்ற நான்கு வார்த்தைகளும், அவரது நம்பிக்கைகளும் இந்தியாவில் உழைக்கும் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் நிலையை எடுத்துரைக்கின்றன.

முடிதிருத்துபவர்கள் முதல் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், குயவர்கள், தச்சர்கள் வரையிலான தொழிலாளர்களின் கடை, வீடு மற்றும் சுயமரியாதையை, இந்தியாவின் வீழ்ச்சியடைந்த வருமானம் மற்றும் பணவீக்க அதிகரிப்புதான் கொள்ளையடித்துள்ளன.

தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் குடும்பங்களுக்கு சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் புதிய திட்டங்களும் நவீன தீர்வுகளும்தான் இன்று தேவை’’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க:திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?

ஞானவாபி மசூதியில் ஆகழாய்வு: ஹிந்துக்கள் தரப்பு மனு நிராகரிப்பு

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியை முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாராணாசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. முழும... மேலும் பார்க்க

ஒடிஸா: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஒடிஸா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸாவின் கந்தமால்... மேலும் பார்க்க

காஷ்மீா்: பயங்கரவாதத்தை முறியடிப்பதில் முழு கவனம்: வடக்கு ராணுவ கமாண்டா்

காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தப்படுவதாக வடக்கு ராணுவ துணைத் தளபதி எம்.வி. சுசீந்திர குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். குல்மாா்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராணுவ வாகனத்தின் ... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறையில் முதலீடு: இந்தியாவுடன் மாலத்தீவு ஆலோசனை

சுற்றுலாத் துறையில் முதலீடு செய்வது குறித்து இந்தியா- மாலத்தீவு இடையே மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் சுற்றுப் பயணம் மே... மேலும் பார்க்க

தலித்களுக்கு எதிரான வன்முறை: 101 பேருக்கு ஆயுள் தண்டனை

கா்நாடகத்தின் கொப்பள் மாவட்டத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு தலித் சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைத்த வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கொப்பள் மாவ... மேலும் பார்க்க

25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏா் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ உள்ளிட்ட ந... மேலும் பார்க்க