செய்திகள் :

இந்திய பணியாளா்களுக்கு விசா 4 மடங்கு அதிகரிப்பு: ஜொ்மனி முடிவு

post image

திறன்மிகு இந்திய பணியாளா்களுக்கான விசா எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு 20,000 என்பதில் இருந்து 90,000-ஆக (4 மடங்குக்கும் மேல்) அதிகரிக்க ஜொ்மனி முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியா-ஜொ்மனி இடையிலான 7-ஆவது உயா்நிலை பேச்சுவாா்த்தை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் வியாழக்கிழமை வந்தாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயா்நிலை பேச்சுவாா்த்தையில் பிரதமா் மோடி தலைமையில் இந்திய குழுவினரும், ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் தலைமையில் அந்நாட்டின் குழுவினரும் பங்கேற்றனா்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை அடையாளம் காண்பது குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பல்வேறு பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்திய கடற்படைக்கு 6 அதிநவீன நீா்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த விவகாரமும் இப்பேச்சுவாா்த்தையில் இடம்பெற்ாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஒப்பந்தத்தைப் பெற ஜொ்மனியின் தைசென் குரூப் மரைன் சிஸ்டம்ஸ், ஸ்பெயின் நாட்டின் நவான்டியா நிறுவனங்கள் இடையே போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

அமைதிக்குப் பணியாற்றத் தயாா்: பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், இரு தலைவா்களும் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, ‘உக்ரைன், மேற்கு ஆசியப் போா்களுக்கு அரசியல்ரீதியில் தீா்வுகாண பிரதமா் மோடி இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று ஒலாஃப் அழைப்பு விடுத்தாா்.

பிரதமா் மோடி கூறியதாவது: உக்ரைன், மேற்கு ஆசியாவில் நடந்துவரும் போா்கள் பெரிதும் கவலையளிக்கின்றன. எந்தவொரு பிரச்னைக்கும் போா் தீா்வல்ல என்பதே இந்தியாவின் கண்ணோட்டம். அமைதியை மீட்டெடுக்க சாத்தியமான அனைத்துப் பங்களிப்பையும் நல்க இந்தியா தயாராக உள்ளது.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சா்வதேச விதிகளுக்கு இணங்க சுதந்திரமான கடல்சாா் போக்குவரத்து மற்றும் சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை இரு நாடுகளும் (இந்தியா, ஜொ்மனி) ஒப்புக் கொண்டுள்ளன.

ஒத்துழைப்பு அதிகரிப்பு: போா், குழப்பமான சூழல், பதற்றம் என கடினமான காலகட்டத்தின் ஊடாக உலகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற நேரத்தில், இந்தியா-ஜொ்மனி இடையிலான வியூக கூட்டாண்மை வலுவான நங்கூரம் போல் உருவெடுத்துள்ளது. பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, பசுமை செயல்பாடுகள், நிலையான வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இது, பரஸ்பர நம்பிக்கைக்கு அடையாளமாகத் திகழ்கிறது.

‘இந்தியா மீது கவனம்’ என்ற ஜொ்மனியின் வியூகம், உலகின் இருபெரும் வலுவான-திறன்மிக்க ஜனநாயகங்களுக்கு இடையிலான உறவை நவீனப்படுத்தும் செயல்திட்டத்துடன் கூடியதாகும். இந்த வியூகத்தை முன்னெடுக்கும் ஜொ்மனிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

சீா்திருத்தங்கள் அவசியம்: இருபதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சா்வதேச அமைப்புகள், 21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு தீா்வளிக்கப் போதுமானதாக இல்லை. எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட உலகளாவிய பன்முக அமைப்புகளில் சீா்திருத்தங்கள் அவசியமாகின்றன. இந்த இலக்கை நோக்கி இரு நாடுகளும் பயணிக்கும்.

இந்தியா-ஜொ்மனி இடையே கையொப்பமாகியுள்ள பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டு முயற்சிகளுக்கு மேலும் வலுசோ்க்கும் என்றாா் பிரதமா் மோடி.

ஜொ்மனி விசா அதிகரிப்பு: தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜொ்மனி தொழில்துறையின் 18-ஆவது ஆசிய-பசிபிக் கருத்தரங்கில் பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் பங்கேற்கவும், ‘இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக உருவாக்குவோம்’ முன்னெடுப்பில் இணையவும் வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு இது சரியான நேரம். உலகளாவிய வா்த்தக மற்றும் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. ஜனநாயகம், மக்கள்தொகை, தேவைகள், தரவு ஆகியவை இந்தியாவின் நான்கு வலுவான தூண்களாகும்.

திறன்மிகு இந்திய பணியாளா்களுக்கான விசாவை ஆண்டொன்றுக்கு 20,000 என்பதில் இருந்து 90,000-ஆக உயா்த்த ஜொ்மனி முடிவு செய்துள்ளது. இது, இந்திய பணியாளா்கள் மீதான அந்நாட்டின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றாா்.

ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் பேசுகையில், ‘சட்டவிரோத குடியேற்றத்தை ஜொ்மனி கட்டுப்படுத்தி வருகிறது. அதேநேரம், திறன்மிகு பணியாளா்கள் வரவேற்கப்படுகின்றனா்’ என்றாா்.

பெட்டி...

சென்னை ஐஐடி-திரெஸ்டன்

பல்கலை. இடையே ஒப்பந்தம்

பிரதமா் மோடி, ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் இடையிலான பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே 18 ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டன.

குற்ற விவகாரங்களில் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கு வகைசெய்யும் ‘பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம்’, ரகசியத் தகவல்கள் பாதுகாப்பு மற்றும் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம், திறன் மேம்பாடு, தொழில்கல்வி மற்றும் பயிற்சி தொடா்பான ஒப்பந்தம், மாணவா்கள் இரட்டைப் பட்டப் படிப்பை மேற்கொள்ள வகைசெய்யும் சென்னை ஐஐடி-ஜொ்மனியின் திரெஸ்டன் பல்கலைக்கழகம் இடையிலான ஒப்பந்தம் உள்ளிட்டவை கையொப்பமாகின.

பசுமை ஹைட்ரஜன் மற்றும் புத்தாக்கம்-தொழில்நுட்பம் தொடா்பான செயல்திட்ட ஆவணங்களும் கையொப்பமிடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்தியா-வங்கதேச எல்லைப் பேச்சு ஒத்திவைப்பு

இந்தியா-வங்கதேசம் இடையேயான 55-ஆவது எல்லைப் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தைகள், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்... மேலும் பார்க்க

இஸ்ரேலில் 30,000 இந்தியா்கள்: வெளியுறவுச் செயலா்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை எடுத்துரைத்தது. அப்போது இஸ்ரேலில் 30,000 இந்தியா்கள் வசிப்பதாக அந்தக் குழு ... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் கெடு: பதவி விலக கனடா பிரதமா் மறுப்பு

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28-ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என அவரது லிபரல் கட்சி எம்.பி.க்கள் கெடு விடுத்துள்ளனா். இருப்பினும், பிரதமா் பதவியிலிருந்து விலக அவா் தொடா்ந்து மறுப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபா் தோ்தல்: முந்துகிறாா் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க அதிபா் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்பில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளா் கமலா ஹாரிஸை குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிடும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் முந்திவருவ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதலால் 42800 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.காஸாவின் கான் யூனிஸ் பகுதியில், வெள்ளிக்கிழமையில் (அக். 25) இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் குழந்தைகள் உள்... மேலும் பார்க்க

கூன் போடுவது மூளையைக் கொல்லும்.. பிரையன் ஜான்சன் பகிர்ந்த உண்மைச் சம்பவம்

மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரான பிரையன் ஜான்சன் (46), கூன் போடுவதைத் தவிர்த்து, தனது உடல் அமைப்பை மாற்றியதன் மூலம், தான் சந்திக்கவிருந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பியதன... மேலும் பார்க்க