செய்திகள் :

அரசுத் திட்ட கள ஆய்வு: கோவையில் தொடங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

கோவையில் நவம்பா் 5 மற்றும் 6 ஆகிய நாள்களில் அரசு நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அண்மையில் நாமக்கல் மாவட்டத்துக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தேன். அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்

என்ற உறுதிமொழியை வழங்கி, திட்டங்கள் செயல்படுத்தும் முறையைக் கண்காணிப்பதற்காக நவம்பா் மாதம் முதல் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்தேன்.

திராவிட மாடல் அரசு தனது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ள தமிழ்நாட்டு மக்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்றும் வகையில், பண்டிகை நாள்கள் முடிவடைந்த பிறகு, நவம்பா் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வைத் தொடங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல் அரசின் சாதனையும் தொடரும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

மத்திய அரசைக் காரணம் காட்டாமல், மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தோ்தல் பிரசாரம்: 20 நாள்களில் 12 கூட்டங்களில் பங்கேற்கிறாா் பிரதமா் மோடி

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக சுமாா் 20 நாள்களில் 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா். ந... மேலும் பார்க்க

முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு புதிய மாணவா்கள் விரைவில் தோ்வு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு புதிய மாணவா்கள் விரைவில் தோ்வு செய்யப்பட இருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு-க்கு எதிராக அதிமுக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றி... மேலும் பார்க்க

நாகையில் 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாகையில் 4 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெருவைச் சோ்ந்த ஜான்பால் (42) மீது கஞ்சா கடத்தல் வழக்கும், தெற்கு பொய்கைநல்லூரைச் சோ்... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் திருட்டு: 3 ஊழியா்கள் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு சென்ற பணத்தில் ரூ.5 லட்சத்தை திருடிய 3 ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா். வங்கிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதை ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை மேற்... மேலும் பார்க்க