செய்திகள் :

சாப்பிட பணமில்லாமல் கஷ்டப்பட்டவர் இன்று மும்பை அணியின் பெருமைமிக்க கேப்டன்: நீதா அம்பானி

post image

பாண்டியா சகோதாரர்களிடம் முதல்முறையாக பேசியபோது நல்ல உணவுக்கு கஷ்டப்பட்டவர்களாக இருந்தார்கள் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்தாண்டு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றார். இந்தாண்டும் அவர் கேப்டனாக நீடிக்கிறார்.

இதையும் படிக்க : ஐபிஎல் 2025: 10 அணிகளின் முழுமையான போட்டி அட்டவணை விவரம்!

இந்த நிலையில், அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி, பாண்டியா சகோதரர்கள், பும்ரா, திலக் வர்மா போன்ற திறமையான வீரர்களை அறிமுகப்படுத்தியது குறித்து விவரித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“ஐபிஎல் பொறுத்தவரை அனைத்து அணிகளுக்கும் குறிப்பிட்ட பட்ஜெட் மட்டுமே ஒதுக்குவார்கள். அதனால், குறிப்பிட்ட தொகையில் திறமையான வீரர்களை வெளி கொண்டுவர வேண்டியது அவசியம்.

அதனால், ஒவ்வொரு ரஞ்சி கோப்பை மற்றும் உள்நாட்டு தொடர்களுக்கு நானும் எனது குழுவும் சென்று வீரர்களை பார்ப்போம்.

ஒருநாள், மெலிந்த இரண்டு இளம் வீரர்களுடன் உரையாடினோம். அவர்களுடன் நான் பேசியபோது, பணமில்லாததால் மூன்று ஆண்டுகளாக மேகி மற்றும் நூடுல்ஸ் தவிர வேறெதுவும் சாப்பிடவில்லை என்று கூறினார்கள். ஆனால், வாழ்க்கையில் பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை அவர்களிடம் பார்த்தேன். அவர்கள்தான் ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்டியா.

2015ஆம் ஆண்டு ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினேன். இன்று அவர் எங்கள் அணியின் பெருமைமிக்க கேப்டன். அடுத்தாண்டே எங்கள் அணியில் வித்தியாசமான உடல்மொழியுடன் பந்துவீசும் இளம் வீரரை அறிமுகப்படுத்தினோம். மற்றதெல்லாம் வரலாறு.

கடந்தாண்டு திலக் வர்மாவை அறிமுகப்படுத்தினோம். அவர் தற்போது இந்திய அணியின் பெருமைமிக்க வீரராக உள்ளார். எனவே, மும்பை இந்தியன்ஸை இந்திய கிரிக்கெட்டின் நர்சரி பள்ளி என்று அழைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் டிராபி: மீண்டும் அணியில் இணைந்த இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பர்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து இளம்வீரர் ஜேமி ஸ்மித்துக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொ... மேலும் பார்க்க

விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில்!

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பேசியுள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள 6 ... மேலும் பார்க்க

ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்

ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்புவேன் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய ... மேலும் பார்க்க

முகமது ஷமிக்கு ரிக்கி பாண்டிங் புகழாரம்!

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நேற்று (பிப்ரவரி 20) நடைபெற்ற ப... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வானது விதர்பா!

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் விதர்பா 383 ரன்களும் மும்பை 270 ரன்களும் எடுத்தன. 2ஆவது இன்னிங்ஸில் விதர்பா 292 ரன்கள் எடுத்தது... மேலும் பார்க்க

74 ஆண்டுகள், 352 போட்டிகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை..! ரஞ்சி இறுதிப் போட்டியில் கேரளம்!

முதல்முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது கேரள அணி. அரையிறுதியில் குஜராத், கேரள அணிகள் விளையாடின. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த கேரள அணி 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.அதிகபட்சமாக... மேலும் பார்க்க