செய்திகள் :

``சாப்பிட வந்தபோது என் தாயை இழந்துவிட்டேன்'' - ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை தீவிபத்து; 8 பேர் பலி

post image

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

அவசர சிகிச்சை பிரிவில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தீவிபத்து ஏற்பட்டவுடன் அவசர சிகிச்சை பிரிவு இருந்த மாடி முழுக்க புகைமண்டலமாக மாறியது.

இதனால் நோயாளிகளால் வெளியில் செல்ல முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆனாலும் மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீவிபத்து ஏற்பட்ட மாடியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.

ராஜஸ்தான்: அரசு மருத்துவமனையில் தீவிபத்து
ராஜஸ்தான்: அரசு மருத்துவமனையில் தீவிபத்து

அப்படி இருந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 8 நோயாளிகள் மூச்சுத்திணறல் உட்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீ மற்ற மாடிகளுக்கு பரவுவதற்குள் அணைத்தனர்.

ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த முக்கிய ஆவணங்கள், மருத்துவ உபகரணங்கள், ரத்த மாதிரிகள் எரிந்து போனது. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை செய்யும் விகாஷ் கூறுகையில், ''நாங்கள் ஆபரேசன் தியேட்டரில் இருந்தபோது தீவிபத்து குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே நோயாளிகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கு ஓடினோம்.

ஆனால் எங்களால் 3 நோயாளிகளைத்தான் காப்பாற்ற முடிந்தது. அதற்குள் தீயின் அளவு அதிகரித்துவிட்டது. இதனால் எங்களால் உள்ளே நிற்க முடியவில்லை.

சடலம்
தீவிபத்தில் 8 நோயாளிகள் பலி

கடுமையான புகைமண்டலமாக இருந்ததால் பின்னர் வந்த போலீஸாரால் உள்ளே செல்ல முடியவில்லை. தீயணைப்பு துறையினர் வந்தபோது ஒட்டுமொத்த கட்டிடமும் புகைமண்டலமாக நிரம்பி இருந்தது. இதனால் கட்டிடத்தின் ஜன்னலை உடைத்து அந்த வழியாக தீயை அணைக்க ஆரம்பித்தனர்'' என்றார்.

முதல்வர் பஜன்லால் சர்மா மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை பார்வையிட்டார். அவரிடம் தீவிபத்தின்போது மருத்துவமனை ஊழியர்கள் ஓடிவிட்டதாக நோயாளிகள் குற்றம் சாட்டினர்.

இம்மருத்துவமனை தீவிபத்தில் தனது தாயாரை இழந்த நரேந்திர சிங் இது குறித்து கூறுகையில், ''எனது தாயாரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்திருந்தோம். நான் சாப்பிடுவதற்காக கீழே இறங்கி வந்தேன். அந்த நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க எந்தவித சாதனங்களும் இல்லை'' என்றார்.

நோயாளிகளை அவர்களது உறவினர்களே தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து மீட்க வேண்டிய நிலையில் இருந்ததாக மற்றொரு உறவினர் புரன்சிங் தெரிவித்தார்.

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து - பதறிய மக்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மயிலாடுதுறை கிராமத்தில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீப... மேலும் பார்க்க

விழுப்புரம்: நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்… மூன்று இளைஞர்கள் உயிரிழந்த பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த அஜீஸ் என்ற 25 வயது இளைஞர், பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆயுத பூஜைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையில் கேரளாவுக்குச் செல்ல முடிவெடுத்த அஜீஸ், சென்ன... மேலும் பார்க்க

Ennore: சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி

சென்னை அருகே இருக்கும் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனல் மின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரு... மேலும் பார்க்க

கரூர்: ``நிபந்தனையை மீறி செயல்பட்டார் விஜய்'' - காவல்துறையின் FIR சொல்வது என்ன?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரைதவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தி... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 41 பேர் பலி, கதறி அழுத உறவுகள்; நெஞ்சை உலுக்கிய சோகக் காட்சிகள்

கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் பலிகரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் 3 வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் காட்டுத்தீ 3 வது நாளாக எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்-... மேலும் பார்க்க