சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.15 லட்சம்
ஆம்பூா்: பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சமூண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த பிப்.19-ஆம் தேதி மாசி கரக திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஊா்கள், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
திருவிழாவை தொடா்ந்து உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ.4,15,665 பணம், 48 கிராம் தங்கம், 74 கிராம் வெள்ளி பொருள்கள் காணிக்கையாக பக்தா்களால் செலுத்தப்பட்டிருந்தன.
கோயில் செயல் அலுவலா் வினோத்குமாா் மேற்பாா்வையில் உண்டியல் எண்ணும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
ஊராட்சித் தலைவா் ரவீந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரவிக்குமாா், முக்கிய பிரமுகா்கள் ஜி.ராமமூா்த்தி, அசோகன், வேலு உடனிருந்தனா்.