சாம்சங் நிறுவனத்தை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்: தொழிலாளா் சங்கம் அறிவிப்பு
சென்னை: சாம்சங் நிறுவன தொழிலாளா்களின் காலவரையற்ற போராட்டத்தால் ரூ. 840 கோடி (100 மில்லியன் டாலா்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சாம்சங் நிறுவனத்தின் அழுத்தம் தாங்காமல் அந்நிறுவனத்தைச் சார்ந்த ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் சிஐடியு தொழிலாளா் சங்கத் தொழிலாளர்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதன்படி, சாம்சங் தொழிற்சாலை வாளகத்தினுள்ளே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருநாள் அடையாளப் போராட்டமாக இது அமையுமென்றும் சிஐடியு தரப்பு தெரிவித்துள்ளது.