செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் விலகல்!

post image

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸமான் விலகியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 19) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸமானுக்கு காயம் ஏற்பட்டது.

தசைப்பகுதியில் ஏற்பட்ட வலியின் காரணமாக ஃபகர் ஸமான் கிட்டத்தட்ட ஒரு இன்னிங்ஸ் முழுவதும் ஃபீல்டிங்குக்கு வரவில்லை. தொடக்க ஆட்டக்காரராகவும் அவர் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக சௌத் ஷகீல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 4-வது வீரராக களமிறங்கிய ஃபகர் ஸமான் பேட்டிங்கின்போது, மிகுந்த சிரமப்பட்டார். அவர் 41 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: ரோஹித் தவறவிட்ட கேட்ச்..! ஹாட்ரிக் விக்கெட்டை இழந்த அக்‌ஷர் படேல்!

ஃபகர் ஸமான் விலகல்

காயம் காரணமாக போட்டியின்போது சிரமமடைந்த ஃபகர் ஸமான், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபகர் ஸமானுக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான இமாம் உல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியுள்ள ஃபகர் ஸமானுக்குப் பதிலாக இமாம் உல் ஹக் மாற்று வீரராக பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியது குறித்து ஃபகர் ஸமான் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: துரதிருஷ்டவசமாக, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து நான் விலகியுள்ளேன். ஆனால், அல்லா எனக்காக நல்ல திட்டங்களை கண்டிப்பாக வைத்திருப்பார். சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வீட்டிலிருந்தபடியே பாகிஸ்தான் அணிக்கு எனது ஆதரவை அளிப்பேன் எனப் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டபிள்யூபிஎல்: த்ரில்லர் வெற்றி பெற உதவிய 16 வயது தமிழக வீராங்கனை..!

மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபியை மும்பை அணி கடைசி ஓவரில் வீழ்த்தி அசத்தியது. மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் ப... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க