செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி செய்ய வேண்டியதென்ன? ரெய்னா பேட்டி!

post image

விராட் கோலி, ரோஹித்தின் ஃபார்ம்தான் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு முக்கியமான கருவி என ரெய்னா கூறியுள்ளார்.

வரும் பிப்.19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் துவங்குகின்றன. மார்ச் 9ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன.

இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன. இந்த ஹைபிரிட் மாடல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்திய அணி நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தானை குரூப் ஸ்டேஜ் சுற்றில் எதிர்கொள்கின்றன.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் சுரேஷ் ரெய்னா கூறியதாவது:

ஒருநாள் உலகக் கோப்பை 2023க்குப் பிறகு ரோஹித் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. அப்போது முதல் 119-120 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். அது அவரை சிறந்த ஒருநாள் வீரராக மாற்றியுள்ளது.

ரோஹித், விராட் கோலிக்கு பழைய போட்டிகளில் வலுவான ரன்கள் குவித்த நம்பிக்கை இருக்கிறது. பெரிய ரன்களை குவிக்க இருவருக்கும் திறமை இருக்கிறது.

ரோஹித், கோலி இருவரும் நன்றாக விளையாடினால் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியில் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

ஜடேஜா முக்கியமாக விளையாட வேண்டும். குல்தீப் யாதவ் காயத்துக்குப் பிறகு அதிகமான போட்டிகள் விளையாட வில்லை. அதே சமயம், அக்‌ஷர் படேல் சிறப்பாக விளையாடி வருகிறார். துபையில் சுழல்பந்துக்கு சாதகமாக இருக்கும். அதனால்தால் குல்தீப், ஜடேஜா, அக்‌ஷர் முக்கியமான வீரர்களாக இருப்பார்கள்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டைப் பொருத்தவரை விராட் கோலிக்கு எப்படி ஆட வேண்டுமெனத் தெரியும். இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்களை குவித்துள்ளார். அதனால் அவரது ஆற்றல் சாதரணமாகவே வேற லெவலில் இருக்கும்.

நாக்பூர், அகமதாபாத், கட்டாக் ஆகிய திடல்களில் நடைபெறும் போட்டிகள் அதிக ரன்களை குவிக்க ஏதுவானதாக அமைந்திருக்கும்.

ரோஹித் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் எப்படி விளையாடினார் என்பதைப் பார்த்தோம். இறுதிப் போட்டியிலேயே அவர் அப்படித்தான் விளையாடினார். அதனால், அவர் அப்படித்தான் விளையாடுவார் என நினைக்கிறேன்.

ஷுப்மன் கில்லுடன் யார் இறங்குகிறார்கள் என்பது முக்கியமானது. ரோஹித் உடன் இருந்தால் இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள்.

ரோஹித் ரன்கள் அடித்தால் அது அவரது தலைமைப் பண்பிலும் பிரதிபலிக்கும். இதுதான் அவரது கடைசி ஐசிசி தொடர். அதனால் இதை வென்றால் அவருக்கு சிறப்பான முடிவாக இருக்கும் என்றார்.

வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும... மேலும் பார்க்க

விராட் கோலி, ரோஹித் சர்மா ரோபோக்கள் அல்ல; முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு!

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரோபோக்கள் அல்ல என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந... மேலும் பார்க்க

ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டர்..! ரிக்கி பாண்டிங் புகழாரம்!

தி ஹைவி கேம்ஸ் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிக்கி பாண்டிங் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட்டரென புகழ்ந்து பேசியுள்ளார்.இந்தியாவின் நட்சத... மேலும் பார்க்க

ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளை தவறவிடும் இங்கிலாந்து வீரர்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறவிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில... மேலும் பார்க்க

ஒரு டெஸ்ட் தொடர் இழப்பு ஒட்டுமொத்த அணியின் ஃபார்மை தீர்மானிக்காது: ஷுப்மன் கில்

ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது ஒட்டுமொத்த அணியின் ஃபார்மினை தீர்மானிக்காது என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெ... மேலும் பார்க்க

சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மை... மேலும் பார்க்க