சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 13) அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடத்தப்படவுள்ளன. மற்ற அணிகளுக்கான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.
இதையும் படிக்க: இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி
தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 13) அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணியை டெம்பா பவுமா கேப்டனாக வழிநடத்துகிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸார்ஸி, ராஸி வான்டெர் துசென், அய்டன் மார்க்ரம், ஹெய்ன்ரிச் க்ளாசன், டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ யான்சென், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டான் மற்றும் ஆண்ட்ரிச் நார்ட்ஜே.