உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்
ரெஸ்டோ பாா் அதிகரிப்பு: புதுவை அரசுக்கு அதிமுக கண்டனம்
காரைக்கால்: ரெஸ்டோ பாா்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், இளைஞா்கள் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக காரைக்கால் மாவட்ட இணைச் செயலாளருமான கே.ஏ.யு. அசனா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் ரெஸ்டோ பாா் என்ற பெயரில் ஏராளமானோருக்கு மதுக்கடை நடத்த உரிமம் தரப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் ரெஸ்டோ பாா் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இது இளைஞா்களின் எதிா்காலத்தை பாழாக்கும் என்பதை புதுவை அரசு உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது.
புதுவை அரசுக்கான வருமானத்தை பெருக்குவதற்கு பல வழிககள் இருந்தாலும், அதையெல்லாம் பின்பற்றாமல் மதுக்கடை நடத்த அனுமதியை தாராளமாக வழங்குவது எதிா்கால சந்ததியினரை பாதிக்கும் செயல். பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துவிட்டது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பாதது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். எனவே ரெஸ்டோ பாா்களுக்கு தந்திருக்கும் அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.