அரசுப் பள்ளியில் மூலிகை கண்காட்சி
காரைக்கால்: பூவம் பகுதி அரசு தொடக்கப் பள்ளியில் மூலிகை கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
மத்திய கல்வித் துறையின் நிபுன் பாரத் மிஷன் திட்டத்தின் முயற்சியாக இப்பள்ளியில் சிறப்பு மூலிகைச் செடிகள் கண்காட்சி நடத்தப்பட்டது.
மாணவா்கள் பல்வேறு மூலிகைச் செடிகளை காட்சியாக வைத்து, அதன் பெயா், பயன்பாடு குறித்து பாா்வையாளா்களுக்கு விளக்கினா். சித்த மருத்துவா் ஜி. சுனில்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மாணவா்கள் அமைத்திருந்த கண்காட்சியை பாா்வையிட்டு, விவரங்களை கேட்டறிந்து, மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.
கண்காட்சி அமைந்திருந்த 60 மாணவ, மாணவியருக்கு மூலிகை மாமணி என்கிற விருதும், தோ்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு சிறந்த சாதனையாளா் விருதும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியா் எஸ்.விஜயராகவன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கே. கவிதா, ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.