செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் செல்கிறாரா ரோஹித் சர்மா?

post image

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சாம்பியன்ஸ் டிராபி வருகிற பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. இதன்மூலம் 1996 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் அணி ஐசிசி போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய அணி மறுத்ததால், இந்தியாவுக்கானப் போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் விளையாடுகிறது.

7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஞ்சி டிராபியில் ரிஷப் பந்த்!

இருப்பினும், தொடக்க விழாவில் பங்கேற்கும் மெகா நிகழ்வுக்கு முன்னதாக ரோஹித் சர்மா தனது வாழ்க்கையில் முதல் முறையாக பாகிஸ்தானுக்குச் செல்லவிருப்பதாக பிசிசிஐயின் நம்பத் தகுந்த வட்டாங்கள் தெரிவித்துள்ளன. 2007 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான ரோஹித் சர்மா இதுவரை பாகிஸ்தானுக்கு பயணம் செய்ததில்லை.

ரோஹித் சர்மா பாகிஸ்தானுக்கு செல்வாரா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி அறிவிக்கப்பட்ட பிறகுதான் அவர்கள் இந்த விஷயம் குறித்து தெரிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க விழாவிற்கு ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 16 அல்லது 17 ஆம் தேதியன்று நடைபெறும் இந்த நிகழ்வில் அனைத்து அணிகளின் கேப்டன்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 பந்துகளில் அதிரடி சதம்! புதிய சாதனை படைத்தார் ஸ்மிருதி மந்தனா!

இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை: மாயாவதி

இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை என்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றுக் கட்சி பகுஜன் சமாஜ்தான் எனவும் அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச முன்ன... மேலும் பார்க்க

இந்திய தேர்தல், ஆளுங்கட்சி குறித்து மார்க் ஸக்கர்பெர்க் சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தலைமை நிறுவனமான மெட்டாவின் தலைமை அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் அளித்த பேட்டியொன்றில் இந்தியாவில் தேர்தல்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. “கரோனா... மேலும் பார்க்க

இஸ்கான் கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

மும்பை : நவி மும்பையில் உள்ள கர்கார் பகுதியில் கட்டப்பட்டுள்ள இஸ்கான் கோயிலை இன்று(ஜன. 15) திறந்துவைத்தார் பிரதமர் மோடி.அப்போது அவர், “இஸ்கான் கோயிலானது நம்பிக்கை, தத்துவம் மற்றும் ஞானத்தின் மையமாக தி... மேலும் பார்க்க

2024-ல் சொகுசு வீடுகளின் விற்பனை 53% அதிகரிப்பு!

நாட்டில், வீட்டு வாடகைக்குத் திண்டாடும் மக்களுக்கு இடையே, ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலையுள்ள சொகுசு வீடுகளின் விற்பனை கடந்த 2024ல் 53 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலகளாவிய வணிக ரியல் எஸ்டேட் சேவைகள... மேலும் பார்க்க

வேட்புமனு தாக்கல் செய்தார் கேஜரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான புது தில்லி தொகுதியில் புதன்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். மேலும் பார்க்க

கிளாட்-2025 தேர்வு: வழக்குகளை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிசீலனை!

2025-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஏதேனும் ஒரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கவிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்... மேலும் பார்க்க