செய்திகள் :

சாலைப் பள்ளங்களுக்காக பெங்களூருவை விட்டுச் செல்வதா? பிரபல நிறுவன சிஇஓ

post image

பெங்களூருவில் உள்ள சாலைப் பள்ளங்களால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்படுவதால், அந்நகரில் இருந்து வெளியேறுவதாக பிரபல தளவாட தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்திருந்தது.

ஊழியர்கள் சாலைப் பள்ளங்கள், போக்குவரத்து நெரிசலால் பணிக்கு வர ஒன்றரை மணிநேரம் ஆவதால், வேறு நகருக்கு நிறுவனத்தை மாற்றவுள்ளதாகவும் காரணங்கள் கூறப்பட்டன.

இந்நிலையில், சாலைப் பள்ளங்களுக்காக பெங்களூருவை விட்டுச் செல்வதா? என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூருவில் செயல்பட்டு வரும் தளவாட தொழில்நுட்ப நிறுவனம் பிளாக்பக். ரூ. 11,000 கோடி மதிப்புடைய இந்நிறுவனம் கர்நாடகத்தின் முக்கிய தளவாட தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

பெங்களூருவில் பெய்து வரும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளதால், ஊழியர்கள் பணிக்கு வர ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் ஆவதால், பெங்களூருவில் இருந்து வேுறு நகருக்கு நிறுவனத்தை மாற்றவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் யாபாஜி தனது எகஸ் தளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் முன்னாள் சி.எஃப்.ஓ. மோகந்தாஸ் பாய், பையோகான் நிறுவன செயல் தலைவர் கிரண் மஸூம்தார் ஷா ஆகியோர் கர்நாடக அரசு அலுவலர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

பெங்களூரு நகரமானது பொருளாதார மையமாகத் திகழ்வதாகவும், தவிர்க்கக்கூடிய காரணங்களுக்காக அதனை விட்டு வெளியேறுவது, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என மோகந்தாஸ் பாய் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரை எட்டியதால், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். பெங்களூரு சாலைப் பள்ளங்கள் மற்றும் புழுதி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர்கள் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து மாறுவதாக இருந்த திட்டம் மாறிவிட்டதைக் குறிப்பிட்டு, பிளாக்பக் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் யாபாஜி தெரிவித்துள்ளதாவது,

''பெங்களூரு எங்களுக்கு என்றுமே வீடு போன்றது. நாங்கள் உறுதித்தன்மையுடன் இங்கிருந்தே இயங்க உள்ளோம். எங்களுடைய தேவைகள் மற்றும் கோரிக்கைகளை தொடர்புடைய அரசு நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி, பிரச்னைகளுக்குத் தீர்வு காண உள்ளோம். அதோடு மட்டுமின்றி பெங்களூருவிலேயே எங்கள் கிளைகளை விரிவாக்கம் செய்யவுள்ளோம்'' எனவும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | மத்தியப் பிரதேசத்தில் தடம்புரண்ட சரக்கு ரயிலின் 3 பெட்டிகள்!

வருமான வரி, ஜிஎஸ்டியில் சலுகை: பிரதமர் மோடி

நாட்டில் இதுவரை 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்திய பொருளாதாரத்த... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தல்

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நன்ஹி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் காணாமல் போ... மேலும் பார்க்க

ரூ. 5000 கோடி மதிப்பிலான 13 திட்டங்களுக்கு நாளை அடிக்கல்!

அருணாசலப் பிரதேசத்தில் ரூ. 5000 கோடி மதிப்புடைய 13 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப். 22) அடிக்கல் நாட்டவுள்ளார்.இதனைத் தொடர்ந்து மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்தி... மேலும் பார்க்க

42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் (பனிச்சறுக்கு) சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று இந்திய வீரர் ஆனந்த்குமார் (22) வேல்குமார் இன்று (செப். 21) சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 42 கி.மீ. மாரத்தா... மேலும் பார்க்க

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிமை காலை 6:41 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6ஆகப் ப... மேலும் பார்க்க

மேகாலயாவில் லேசான நில அதிர்வு

வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேகாலயாவிலும் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டன.அண்டை நாடான வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவில் 4ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேகாலயாவ... மேலும் பார்க்க