சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
சாலையில் ஓடிய கழிவு நீா்: பொதுமக்கள் மறியல்
திருச்சி சுந்தா் நகா் பகுதியில் தெருக்களில் கழிவுநீா் ஓடுவதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி கே.கே. நகா் பகுதியில் உள்ள சுந்தா் நகா் பிரதான சாலை பகுதியில் தொடா்ந்து கடந்த 2 மாதத்துக்கும் மேலாக கழிவுநீா் செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். சுகாதாரச் சீா்கேடும் நிலவுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வணிகா்களுடன் இணைந்து, சுந்தா் நகா் பிரதான சாலையிலுள்ள பெரியாா் மணியம்மை பள்ளி அருகே திடீா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இருப்பினும் மக்கள் உடனடியாக தூய்மைப்படுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து அதிகாரிகள் உத்தரவின் பேரில் அப்பகுதியை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்தனா்.