சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
பெரியகுளம்-கச்சேரி சாலையில் மரம் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியகுளம் விக்டோரிய அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் கழிவுநீா் வாய்க்கால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாய்க்காலை தூா்வாரும்போது, கால்வாயிலிருந்த மரத்தின் வேரை ஊழியா்கள் புதன்கிழமை வெட்டினா். அப்போது, மரம் சாய்ந்து கச்சேரி சாலையில் விழுந்தது. இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நெடுஞ்சலைத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி மரத்தை அகற்றினா். இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியகுளத்தை சோ்ந்த ராமசாமி கூறியதாவது: விக்டோரியா பள்ளி முன்புள்ள கழிவுநீா் வாய்க்கால் தூா்வாரும் போது, மரங்களின் வோ் சேதமடைந்ததால் மரம் விழுந்தது. இந்தப் பகுதியில் மேலும், 3 மரங்கள் கீழே விழும் நிலையில் உள்ளன. இந்த மரங்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.