டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
சாலையோர கடையில் புகுந்த காா்
சாலையோர கடையில் காா் புகுந்த விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள காடச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆதித்யா. இவா் ஈரோட்டில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செவ்வாய்க்கிழமை மதியம் தனது காரில் திருச்செங்கோடு திரும்பினாா்.
கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகில் சென்றபோது திடீரென காா் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் இருந்த குமாா் என்பவருடைய தள்ளுவண்டி கடையின் மீது காா் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தள்ளுவண்டி மற்றும் கடையில் இருந்த கண் கண்ணாடி, தலைக்கவசம் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாயின. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஆதித்யா லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். மேலும் காா் தாறுமாறாக வருவதை கண்ட குமாா் அங்கிருந்து ஓடி உயிா் தப்பினாா். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.