சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 போ் பலத்த காயம்
கந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
மதுரையிலிருந்து 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தஞ்சை -புதுகை தேசிய நெடுஞ்சாலையில் கந்தா்வகோட்டை அடுத்த புனல்குளம் அருகில் வந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் பயணித்த 3 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை அந்தப் பகுதியிலிருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் சிகிச்சைக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து காரணமாக தஞ்சை -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய அரசு பேருந்தை கிரேன் உதவியுடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் மீட்டனா்.