சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
சாலையோர மரத்தை வேருடன் அகற்றியதை கண்டித்து போராட்டம்
புதுக்கோட்டை நகரில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்றை, எவ்வித அனுமதியும் இன்றி நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை வேருடன் அகற்றியதை கண்டித்து, மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா் மரத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டாா்.
புதுக்கோட்டை மாநகரில் தெற்கு 4ஆம் வீதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, ஒரு மரத்தை வேருடன் அகற்றினா். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா் பழனியப்பா கண்ணன், அந்த 14 அடி உயர மரத்துடன்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டாா்.
மாநகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கரன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இனி இதுபோல் நடக்காது என அவா் உறுதியளித்ததாக கண்ணன் தெரிவித்தாா்.