எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
ஆவுடையாா்கோவிலில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது.
மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையிலான அலுவலா்கள் இந்த வட்டத்தில் வியாழக்கிழமை காலை 9 மணி வரை தங்கியிருந்து, அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை நேரில் பாா்வையிட்டும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொள்கின்றனா்.
ஆவுடையாா்கோவில் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற கூட்டத்தில், பொதுமக்களுக்கு ஆட்சியா் மு. அருணா நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா்கள் அ.கோ. ராஜராஜன், ஆா். ரம்யாதேவி, வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவகுமாா், வட்டாட்சியா் மாா்ட்டின் லூதா் கிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.