எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
அமித்ஷா பேச்சுக்கு எதிா்ப்பு: புதுகையில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்
மத்திய உள்துறை அமைச்சா் நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமரியாதையாகப் பேசியதாகக் கூறி, புதுக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் இளமதி அசோகன் தலைமை வகித்தாா். கட்சியினா் பலரும் கலந்து கொண்டனா். உள்துறை அமைச்சரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.