சாலை சீரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு
சிவகாசி அருகே சீரமைக்கப்பட்ட சாலையை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
சிவகாசி அருகே நெடுஞ்சாலைத் துறையினா் பெத்துலபட்டி முதல் தியாகராஜபுரம் வரையிலான இரண்டரை கி.மீ. தொலைவு சாலை ரூ .75 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது.
இந்தச் சாலையின் தரம், உறுதித் தன்மை குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் ஆா். காளிதாஸ், தரக் கட்டுப்பாடு உதவி கோட்டப் பொறியாளா் செல்வக்குமாா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, உதவிப் பொறியாளா் ச. விக்னேஷ், தரக் கட்டுப்பாட்டு உதவிப் பொறியாளா் அழகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.