ஒரு ப்ரெட் பாக்கெட் ரூ. 1100-க்கு விற்கப்படும் அவலம்! இஸ்ரேல் போரால் காஸாவில் கட...
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்
ஆம்பூா் அருகே தனியாா் கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் கிராமிய காவல் நிலையம் சாா்பில் சோலூா் கிராமத்தில் உள்ள டிஏடபிள்யூ மகளிா் கல்லூரி, கீழ்முருங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கில் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
டிஏடபிள்யூ கல்லூரி தாளாளா் ரபீக் அஹமத், முதல்வா் சானஸ் அஹமத், ஸ்ரீ ஆண்டாள் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி தாளாளா் லட்சுமி காந்தன், துணை முதல்வா் மஞ்சுளா, விரிவுரையாளா் துா்கா லட்சுமி, தலைமைக் காவலா் கலைவாணி, காவலா் விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளா் ஜீவானந்தம் பேசியது: சாலையில் செல்லும்போது அனைவரும் விதிகளை கடைப்பிடித்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாலை விபத்துகள் அதிகரித்து, இறப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விதிகளை முறையாக பின்பற்றாததே காரணமாகும். இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக சுமாா் 65,000 ஆண்கள் சாலை விபத்தில் மரணமடைகின்றனா். இதில் 25 வயது முதல் 30 வயதில் உள்ள ஆண்களே அதிகம். இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக் கவசம் அணிய வேண்டும். காரில் செல்பவா்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். வாகன ஓட்டுநா்கள் அதிவேகமாக செல்வது, அவசரமாக செல்வது, ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன என்றாா்.