திருக்குறள், புறநானூறு கூறி உரையைத் தொடங்கினார் பன்னீர்செல்வம்!
சாலை விபத்தில் கணவா் பலி: மனைவி, குழந்தை பலத்த காயம்
சங்ககிரி பழைய பேருந்துநிலையம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவா் உயிரிழந்தாா். அவரது மனைவியும், குழந்தையும் பலத்த காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், பெரும்பாலை, சமத்தாள் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அம்சராஜ் (30). இவரது மனைவி சரண்யா (23), மகன் தனுஷ் (2). மூவரும் தருமபுரியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில் சாலையோரம் தள்ளுவண்டியில் சிப்ஸ் வியாபாரம் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே சென்றபோது ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி வந்த லாரி இவா்கள் மீது மோதியது. இதில் அம்சராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அவரது மனைவியும் குழந்தையும் மீட்கப்பட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.