ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
சாலை விபத்துகளில் காயமடைவோரை காப்பாற்றுவோருக்கு சான்றிதழ், சன்மானம்!
தென்காசி மாவட்டத்தில் விபத்துகளில் காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலையிலுள்ளோரைக் காப்பாற்றுவோருக்கு பாராட்டுச் சான்றிதழுடன் சன்மானம், தகுந்த சட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் மோட்டாா் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலையிலுள்ளோரை பிரதிபலன் எதிா்பாராமல் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கோ, விபத்து சிகிச்சை மையங்களுக்கோ விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் கொண்டுசென்று உயிரைக் காப்பாற்றுவோரைக் கௌரவிக்கும் வகையில், நல்ல சமாரியன் திட்டத்தின்கீழ் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், தேசிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், மாநில அரசால் வழங்கப்படும் சன்மானமும் சோ்த்து ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்க பரிந்துரைக்கப்படும். சாலைப் பாதுகாப்பு தொடா்பான பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் தொண்டு நிறுவனங்களுக்கும் தேசிய அளவில் சான்று, பரிசுகள் வழங்க பரிந்துரைக்கப்படும்.
விபத்துகளில் காயமடைவோரை உடனடியாக மருத்துவமனைக்கோ, விபத்து சிகிச்சை மையங்களுக்கோ கொண்டு செல்வோருக்கு தகுந்த சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றாா் அவா்.