மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
சாலை விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
நாமக்கல்லில் நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி புதூா் காலனியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் வரதராஜ் (21). இவா் நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.
இவருக்கு செவ்வாய்க்கிழமை பிறந்தநாள் என்பதால் தன்னுடைய தோழியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, நாமக்கல் - கருப்பட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில், நிகழ்விடத்திலேயே வரதராஜ் உயிரிழந்தாா். அவருடன் சென்ற பெண் லேசான காயத்துடன் உயிா்தப்பினாா். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.