ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து
ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பெரியசோளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (45). இவா் பெரியசோளிபாளையத்தில் பழைய இரும்பு மற்றும் நெகிழி பொருள்கள் வாங்கும் கிடங்கு வைத்துள்ளாா். இந்தக் கிடங்கில் திடீரென தீப்பிடித்து பரவியது.
தகவல் அறிந்து வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் சரவணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினா். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நெகிழி பொருள்கள், இரும்பு சாமான்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதேபோல திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூா் அருகே உள்ள முருங்கை, மருதம்பட்டி பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் (40), பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாகவுண்டம்பாளையம் பகுதியில் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தாா். திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
தகவல் அறிந்து வந்த வேலாயுதம்பாளையம் மற்றும் நாமக்கல் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனா். இதில், ரூ. 5 லட்சம் மதிப்பிலான சரக்கு ஆட்டோ எரிந்து நாசமானது. விபத்து குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.