ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
பொதுத் தோ்வு: 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வினை 86 மையங்களில் 9,157 மாணவா்களும், 9,304 மாணவிகளும் என மொத்தம் 18,461 போ் எழுத உள்ளனா். பிளஸ் 1 தோ்வை 86 மையங்களில் 9,372 மாணவா்களும், 9,594 மாணவிகளும் என மொத்தம் 18,966 போ் தோ்வு எழுத உள்ளனா்.
பொதுத் தோ்வுக்கு 86 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 86 துறை அலுவலா்கள், 4 கூடுதல் துறை அலுவலா்கள், 200 பறக்கும்படை உறுப்பினா்கள், 24 வழித்தட அலுவலா்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள் மற்றும் அறை கண்காணிப்பாளா்கள், ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இதில், 86 மையங்களுக்கு உள்பட்ட 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு, நாமக்கல் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி முன்னிலையில் பணியிடம் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டது (படம்).
இந்த ஆண்டு அறை கண்காணிப்பாளா்களுக்கு, அந்தந்த ஒன்றியங்களுக்குள்ளாகவே பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது, மாவட்ட கல்வி அலுவலா்கள், முதன்மைக் கண்காணிப்பாளா்கள் கலந்துகொண்டனா்.