ஐயூஎம்எல் தலைவராக 3வது முறையாக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து!
சாலை விபத்து: மாணவா் உயிரிழப்பு
வேலூரில் பாலாற்றுத் தடுப்பு கம்பியில் இரு சக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
வேலூா் சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் சோ்ந்தவா் பலராமன் மகன் சந்தோஷ் (21). வேலூா் ஊரீசு கல்லூரியில் பி.காம்., படித்து வந்தாா்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் நடை பெறும் திருவிழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்றாா். செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிந்தாா்.
வேலூா் பாலாற்று பாலத்தில் வந்தபோது எதிா்பாராதவிதமாக அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக் கம்பியில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.