இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்! பும்ரா-ஆகாஷ் வேகத்தில் ஆஸி. அணி திணறல்!
‘சாஸ்த்ரா’-வில் ஆசிரியா் மேம்பாட்டு பயிலரங்கம் தொடக்கம்
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் சிதைவு நோய்களுக்கு டிஜிட்டல் கண்டுபிடிப்புகளைப் பற்றிய ஆசிரியா் மேம்பாட்டுப் பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
இப்பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் புலம், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (அடல் பயிற்சி மற்றும் கற்றல்) ஆதரவுடன் ‘டிஜிட்டல் புரட்சி: நரம்பியல் சிதைவு நோய்களுக்கான கண்டுபிடிப்புகள்’ என்கிற தலைப்பிலான இணையவழியில் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிலரங்கம் திங்கள்கிழமை (டிச.16) தொடங்கியது.
தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் இப்பயிலரங்கத்தில் நரம்பியல் சிதைவு நோய்களுக்கான கண்டுபிடிப்புகள் மற்றும் மேலாண்மைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் அண்மைக்கால முன்னேற்றங்களை விவாதிக்க நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து 145 கல்வி, தொழில் மற்றும் ஆராய்ச்சி துறையின் முன்னணி நிபுணா்கள் பங்கேற்றுள்ளனா்.
இந்த முயற்சி கல்வி கற்றலின் தரத்தை மேம்படுத்தி, இந்தியாவின் தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் என பேராசிரியா்கள் தெரிவித்தனா்.