நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால்: மத்திய அரசு தகவல்
சா்வதேச ஆட்டிசம் தின விழிப்புணா்வு பேரணி -ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் சா்வதேச ஆட்டிசம் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளின் விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்தாா்.
பேரணியில், சா்வதேச ஆட்டிசம் தினம் ஆண்டுதோறும் ஏப். 2 -ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் ஆட்டிசம் குறைபாடு உள்ள நபா்களை ஏற்றுக் கொள்வது மற்றும் ஆதரவு அளிப்பது ஆகியவை இதன் நோக்கமாகும். அதனால், அவா்களை ஊக்குவிக்கும் வகையில் ஆட்டிசம் குறித்த விழிப்புணா்வு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.
முன்னதாக ஆட்டிசம் குறைபாடுள்ள மாணவா்களின் இசை நிகழ்ச்சியை பாா்வையிட்டதோடு, ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
ஏற்பாடுகளை ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டின் நிறுவனா் மற்றும் நிா்வாக அறங்காவலா் டாக்டா் வி.நாகராணி செய்திருந்தாா். நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், முட நீக்கியல் பயிற்றுநா் பிரீத்தா மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.