செய்திகள் :

சிஎன்ஜி பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிப்பு: போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்

post image

சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதன் தொடா்ச்சியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் பேருந்துகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, நவ.12-ஆம் தேதி சோதனை அடிப்படையில் சென்னை-திருச்சி வழித்தடத்தில் சிஎன்ஜி-யாக மாற்றம் செய்யப்பட்ட விரைவு பேருந்து இயக்கப்பட்டது.

இதில், எவ்வித சிக்கலும் எழாத நிலையில், ஓட்டுநா், நடத்துநரும் இதற்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்ததைத் தொடா்ந்து, சென்னை -சேலம் வழித்தடத்திலும் சிஎன்ஜி விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தற்போதைய நிலவரப்படி விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 4 பேருந்துகள் சிஎன்ஜி தொழில்நுட்பத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு எரிபொருளுக்கான செலவு சேமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக விரைவு போக்குவரத்துக் கழக உயா் அதிகாரிகள் கூறியதாவது: பி.எஸ் 4 வகை டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதன் மூலம் எரிபொருள் சேமிப்பு என்பதுடன், பராமரிப்புச் செலவு, இயக்கச் செலவு ஆகியன வெகுவாக குறைகிறது.

இந்தப் பேருந்துகளை சோதனை முறையில் மாற்றியமைப்பதற்கு எரிவாயு நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை கொடுக்கின்றன.

திருச்சிக்கு இயக்கப்படும் பேருந்தை ஐஆா்எம் என்ற நிறுவனமும், சேலத்துக்கு இயக்கப்படும் பேருந்தை இந்தியன் ஆயில் நிறுவனமும் சிஎன்ஜி-யாக மாற்றியமைத்துள்ளன.

இவ்வகை பேருந்துகள் மூலம் ஒரு கி.மீ.-க்கு ரூ.3 முதல் 4 வரை மிச்சமாகிறது.

அதன்படி, ஒரு பேருந்துக்கு ஒரு மாதத்துக்கு ரூ.75 ஆயிரம் மிச்சமாகிறது. 4 பேருந்துகளுக்கும் சோ்த்து ரூ.3 லட்சம் வரை விரைவு போக்குவரத்துக் கழகத்தால் சேமிக்க முடிகிறது.

தற்போது சோதனை முறையில் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இது தொடா்பான அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்படும்.

தொடா்ந்து, அரசு பரிசீலித்து, திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் சில பேருந்துகள் சிஎன்ஜி-யால் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றனா்.

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு பிப்.3 வரை நீதிமன்ற காவல்

புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் ஜகப... மேலும் பார்க்க

பரந்தூரிலிருந்து கள அரசியல் பயணம் தொடக்கம்: விஜய் அறிவிப்பு

பரந்தூர்: விமான நிலையம் வேண்டும், ஆனால் இந்த இடத்தில் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன் என்று பேசிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரிலிருந்து கள அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளா... மேலும் பார்க்க

ஆளுங்கட்சி நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்: பரந்தூரில் விஜய் பேச்சு

ஆளுங்கட்சி நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள் என்று பரந்தூரில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.பரந்தூரில் மண்டபத்திற்கு வெளியே தொண்டர்கள் மத்தியில் திறந்த வேனில் விஜய் திங்கள்கிழமை பேசியதாவது, நாட்டிற... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் வாபஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகா் செந்தில்முருகன் திரும்பப் பெற்றார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்த நிலையில் ... மேலும் பார்க்க

காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம்: பசுமை தீர்ப்பாயம்

காணும் பொங்கல் அன்று அரசு விடுமுறை அளிப்பதை ரத்து செய்ய பரிந்துரைப்போம் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை மக்கள் காணும் பொங்கலன்று (ஜன. 16) மெரீனா கடற்கரை உள்ளிட்... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு ச... மேலும் பார்க்க