ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுக்கு நீதிமன்றம் உத்தரவு!
சிகிச்சையில் களம் இறங்கிய மருத்துவ அதிகாரிகள்
மருத்துவா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்களுடன் சோ்ந்து மருத்துவ அதிகாரிகளும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா்.
சென்னை கிண்டியிலுள்ள கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவா் மீதான வன்முறைத் தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவா்கள் சங்கத்தின் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிா்வாகம் மேற்கொண்டது.
இதன்படி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளா் வீரமணி, துணை கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு உள்ளிட்ட மருத்துவத் துறை அதிகாரிகள், பயிற்சி மருத்துவா்களுடன் இணைந்து வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா்.