மாணவர் மட்டும்! போக்குவரத்து அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்சய் தத்!
மும்பையில் பாலிவுட் ரெஸ்டாரண்ட்ஸ்
மும்பையில் பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் உப தொழிலாக ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகின்றனர். இதில் ஷாருக்கான் மனைவி கெளரி கான், நடிகை ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், இயக்குநர் கரண் ஜோஹர் என பலரும் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சஞ்சய் தத்தும் இணைகிறார்.

பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களை கொண்ட வணிக வளாகமாக விளங்கும் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் Solaire என்ற பெயரில் முதல் ரெஸ்டாரெண்ட்டை தொடங்க இருக்கிறார்.
அங்குள்ள கிராண்ட் ஹயட் ஹோட்டலில் இந்த ரெஸ்டாரண்ட் திறக்கப்பட இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் படங்களில் நடித்து வரும் சஞ்சய் தத், முதல் முறையாக ரெஸ்டாரெண்ட் தொழிலில் இறங்கி இருக்கிறார்.
சஞ்சய் தத் அறிவிப்பு
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சய் தத் வெளியிட்டுள்ள செய்தியில், "நான் உலகம் முழுவதும் சாப்பிட்டு இருக்கிறேன். இப்போது முதல் முறையாக நானே ரெஸ்டாரண்ட் தொடங்க இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த உணவகம் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான அனுபவத்தை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரெஸ்டாரண்டில் ஆசிய உணவுகள், சீன சிறப்பு வகைகள் உள்ளிட்டவை சிறப்பு அம்சமாக இருக்கும். மேலும் பார் வசதியும் இருக்கும்.
இந்த ரெஸ்டாரண்டை சஞ்சய் தத் மட்டும் நடத்தவில்லை; அவர் தனது தொழில் நண்பர்களான இஷான் வர்மா மற்றும் அமித் லக்யானி ஆகியோருடன் இணைந்து இந்த உணவகத்தை தொடங்குகிறார்.
சஞ்சய் தத் உணவு சமைப்பதில் மிகவும் பிரபலமானவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் தத் சிக்கன் குழம்பு தயாரித்தார்.
அந்த குழம்பு இப்போது மும்பையில் உள்ள நூர் முகம்மது ஹோட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது தற்போது பாபா சிக்கன் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...