தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
சிக்கன் சமைக்காத மனைவியைக் கொன்ற கணவன்!
ஒடிஸாவில் இரவு உணவுக்கு சிக்கன் சமைக்காததால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை அடித்ததில் அவர் பலியானார்.
தேன்கனல் மாவட்டம் கோண்டியா காவல் நிலையத்துக்கு உள்பட்ட தானியானலி முண்டா சாஹி என்ற கிராமத்தில் ஜெனா பிங்குவா (வயது 40), குனி பிங்குவா(35) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படிக்க : ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்தாரா ஜெயலலிதா? எந்தப் படத்தில்?
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராமத்தில் உள்ள கடையில் சிக்கன் வாங்கிய ஜெனா, தனது மனைவியுடன் கொடுத்து இரவு உணவுக்கு சமைத்து வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியே சென்று இரவு வீடு திரும்பியபோது, சிக்கன் சமைத்து வைக்காததால் ஆத்திரமடைந்து மனைவிவை பலமாக தாக்கியுள்ளார்.
இதில், தரையில் விழுந்த குனி, சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த இடத்தைவிட்டு ஜெனா தப்பிய நிலையில், திங்கள்கிழமை காலை குழந்தைகள் தங்களது தாய் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து, கணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.