சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும்: விஜய்
சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும், வேடிக்கைப் பார்க்க வராது என்று தவெக மாநாட்டில் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு சரியாக பிற்பகல் 3 மணிக்கு நாட்டுப்புற இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொண்டர்கள் உற்சாகத்துடன் கேட்டு ஆரவாரம் செய்து நடனமாடினர்.
இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் பேசுகையில், ”சிங்கம் கர்ஜித்தால் 8 கிமீ தூரத்துக்கு அதிரும். சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும். வேடிக்கைப் பார்க்க வராது. காட்டையே கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும். அதற்கு ஒன்றாக இருக்கவும் தெரியும், தனியாக இருக்கவும் தெரியும். சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்.
சிங்கம் எப்போதும் உயிருள்ள மிருகங்களை மட்டுமே வேட்டையாடும். பெரிய விலங்களை மட்டுமே வேட்டையாடும், சிறிய விலங்குகளையோ கேட்டுப் போன உணவுகளையோ தொட்டுக்கூடப் பார்க்காது.
தனியா வந்து அனைவருக்கும் தண்ணீர் காட்டும், அதன் தனித்துவத்தை எப்போதும் விட்டுக்கொடுக்காது. வரும் பேரவைத் தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி” என்றார்.
இதையும் படிக்க: பெரியாரின் பேரன்... தவெக மாநாட்டில் விஜய்யின் குரலில் ஒலிக்கும் கொள்கைப் பாடல்!