சிதம்பரத்தில் ஸ்ரீசுப்ரமணியர் கோயில் தேரோட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீபாண்டியநாயகம் (சுப்ரமணியர்) கோயில் பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வடக்கு கோபுரம் அருகே அமைந்துள்ள பாண்டிநாயகம் கோயிலில் பங்குனி உத்திர உற்சவம் கடந்த ஏப் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் மூலவருக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்று வந்தன.
மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: திரளானப் பக்தர்கள் பங்கேற்பு
பங்குனி உத்தர பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கீழவீதி தேரடி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகளை வலம் வந்து தோ்நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
உற்சவத்தை முன்னிட்டு, லட்சார்ச்சனை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.