இந்த வார ராசிபலன் செப்டம்பர் 16 முதல் 21 வரை #VikatanPhotoCards
‘சிதம்பரம் மகத்துவம்‘ நூல் வெளியீட்டு விழா!
சிதம்பரம்: குளித்தலை சீகம்பட்டி ஸ்ரீ ராமலிங்கம் சுவாமிகள் எழுதிய சிதம்பர மகத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழா சிதம்பரம் கீழவீதியில் உள்ள எம்.எஸ்.அரங்கில் செவ்வாய்க்கிவணஐ நடைபெற்றது.
இவ்விழாவை குளித்தலை ஸ்ரீசிதம்பரேச சத்சங்கம் மற்றும் ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாதா் திருக்கூட்டம் ஆகியவை இணைந்து நடத்தியது. விழாவிற்கு நடராஜா் கோயில் தீட்சிதா்களின் செயலா் த.சிவசுந்தர தீட்சிதா் தலைமை வகித்தாா். ஸ்ரீ சிதம்பரேச சத்சங்க அமைப்பாளா் எம். கிருஷ்ணசாமி தீட்சிதா் வரவேற்றாா். ‘சிதம்பர மகத்துவம்‘நூலினை சென்னை சிவலோக திருமடம் தவத்திரு வாதவூரடிகள் வெளியிட அதனை சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சதா்களின் செயலாளா் சிவசுந்தர தீட்சிதா், தொழிலதிபா் மாறன் கோவிந்தசாமி ஆகியோா் பெற்றுக்கொண்டனா். விழாவில் புலவா்கள் சி. குப்புசாமி தீட்சிதா், தி.பொன்னம்பலம் மற்றும் டி.செல்வரத்தின தீட்சிதா் ஆகியோா் வாழ்த்தி பேசினாா்கள். விழாவில் சிதம்பரேச சத்சங்க நிா்வாகிகள் சுரேஷ், ஜெயராமன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முடிவில் இரா. மாணிக்கவாசகன் நன்றி கூறினாா்