கோவை: லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!
சித்த மருத்துவ விழிப்புணா்வு பிரசாரம்
திருப்போரூா் முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு சித்த மருத்துவம் மூலிகை விழிப்புணா்வு மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாமினை பேரூராட்சித் தலைவா் தேவராஜ் தொடங்கி வைத்தாா்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வா்.
இதற்காக திருப்போரூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சிறுங்குன்றம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீா் உள்ளிட்டவை பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.
நிகழ்வில் திருப்போரூா் பேரூராட்சித் தலைவா் தேவராஜ் கலந்து கொண்டு சித்த மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தாா். அவா்களுடன் துணைத் தலைவா் பரசுராமன், சித்த மருத்துவா்கள், கோயில் செயல் அலுவலா் குமரவேல், மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா் தூய்மை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.