சிறந்த சிந்தனைகள் எப்படி பிறந்தன? ரீல்ஸ் வெளியிட்ட சசிகுமார்!
நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தனது இன்ஸ்டாவில் சிறந்த சிந்தனைகள் பிறந்தது எப்படி? என்ற ரீல்ஸ் விடியோ வெளியிட்டுள்ளார்.
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். தற்போது நடிகராக தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
அயோத்தி, கருடன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, இயக்குநர் ராஜு முருகன், அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு முன், விஜயா கணபதி ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் ஃபிரீடம் எனும் படத்தில் நடித்திருந்தார். சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை சமீபத்தில் வெளியிட்டனர்.
குண்டு வெடிப்பில் பலியான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தால் அப்போது தமிழகத்திலிருந்த இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் இளையராஜா பாடலுக்கு ரீல்ஸ் பகிர்ந்த சசிகுமார் கூறியதாவது:
சிறந்த சிந்தனைகள் எல்லாம் நடக்கும்போது பிறந்தவைதான். விடியோ எடுத்தது நண்பன் எனக் கூறியுள்ளார்.