அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 5 பேர் பலி
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ‘போக்சோ’வில் இளைஞா் கைது
தஞ்சாவூா் அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே மருங்குளத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் கண்ணன் (30). இவா், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை மாா்ச் 11-ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவா் அச்சிறுமியைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கண்ணனை புதன்கிழமை கைது செய்தனா்.